பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா காலமானதை அடுத்து இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதான கலிதா ஜியா உடல் நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
கலிதா ஜியா கடந்த இரண்டு முறை பங்களாதேஷின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், அவரின் மறைவைத் தொடர்ந்து, பங்களாதேஷில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கலீதா ஜியாவின் உடலுக்கு நாளை இறுதி சடங்குகள் செய்யப்படும் என விடப்படும் என்றும் அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அறிவித்துள்ளார்.

