நெதர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 17.3 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆர்யன் தத் 30 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் நசும் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அணி 13.1 ஓவரில் 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டான்சித் ஹசன் தமீம் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற நாளை நடக்கிறது.