இங்கிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனைத்து போட்டிகளும் கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இதன்படி தசுன் ஷானக்க தலைமையிலான குறித்த குழுவில் பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷான், மதீஷ பத்திரண மற்றும் ஈஷான் மலிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

