கனடாவின் விணுபெக் சென்றல் பார்க் பகுதியில் மிருகங்களை தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் மீதே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர், தனது செல்லப்பிராணிகளாக வளர்க்கும் இரு நாய்களை அவற்றிக் கழுத்து பட்டிகளை கடுமையாக இறுக்கி துன்புறித்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வௌ்ளிக்கிழமை இந்த குறித்த இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு இது குறித்த முரண்பாடுகள் கிடைத்தவுடன் இரு மணி நேரத்தில் குறித்த இளைஞர் அருகில் இருந்த குடியிருப்பு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் ஒத்துழைக்காத நிலையில் கடும் சிரமத்துக்கு மத்தியிலேயே இவரை கைது செய்ய வேண்டியிருந்தாக பொலிசார் தெரிவித்தனர்.
அதேநேரம் குறித்த குடியிருப்பில் மற்றுமொரு அறையிலிருந்து அவர் வளர்த்து வந்த இரு நாய்களும் மீட்கப்பட்டிருந்ததுடன், அவை மிருக சேவை மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்பதை பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் மிருகங்களை வளர்ப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.