15.1 C
Scarborough

நானுஓயாவில் மற்றுமொரு லொறி குடைசாய்ந்து விபத்து!

Must read

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறியொன்று நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு (20) நடுவீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான லொறியின் சாரதி அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிக விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது எனவே இவ்வீதி அதிக செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article