அரசியல் சார்ந்த செலவினங்களை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக உலகப் பெரும்பணக்காரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியரசுக் கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளராக எலான் மஸ்க் உள்ள நிலையில், அவரின் இந்த முடிவு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
ஏற்கெனவே நிறைய நன்கொடை அளித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.