நேரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளியான ”மஹாவீர்யார்” திரைப்படத்தின் தயாரிப்பாளரின் முறைபாட்டில் நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திரைப்படத்தின் தோல்வியால் 95 லட்சம் வழங்குவதாகவும் ”ஆக்ஷன் ஹீரோ பிஜு பாகம் 2 ” திரைப்படத்தை தயாரிக்க வாய்ப்பு வழங்குவதாகவும் நடிகர் நிவின் பாலி உறுதியளித்திருந்ததாகத் தயாரிப்பாளர் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.