17.5 C
Scarborough

தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் ஆதரவளிக்க வேண்டும்!

Must read

ஒன்டாரியோ மாகாணத்திற்கு முக்கியமான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி, மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு திங்கட்கிழமையன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அதிவேக நெடுஞ்சாலை 401 கீழ் சுரங்கம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல “தேசிய கட்டுமான” திட்டங்களுக்கு அவர் ஆதரவு கோரியுள்ளார்.

“2025 மார்ச் 21 அன்று நடைபெற்ற முதலர்கள் கூட்டத்தில், தேசிய கட்டுமானத் திட்டங்களுக்கு சிக்கலான ஒப்புதல் முறைகளை எளிமையாக்க நடவடிக்கை எடுப்பதாக நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள்” என ஃபோர்ட் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கூட்டத்திலேயே, “உங்கள் மாகாணத்தில் முன்னுரிமையுடன் நடைமுறைப்படுத்த வேண்டிய தேசிய வளர்ச்சித் திட்டங்களை சொல்லுங்கள்” என பிரதமர் கேட்டதாக ஃபோர்ட் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில், ரிங் ஒஃப் ஃபயர் பகுதியில் முக்கிய கனிமங்கள் சுரங்க மற்றும் ஒத்த தொடர்புடைய புனரமைப்பு திட்டங்களை முன்னிலைப்படுத்தவும், சிறிய மற்றும் பெரிய அணுக்கழு மின்னுற்பத்தி உலைகளை (SMRs) கட்டுவதற்கான உதவிகளையும் ஃபோர்ட் கோரியுள்ளார்.

பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ஹைவே 401 கீழ் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக்கான சுரங்க திட்டமும் இதில் அடங்கியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article