முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், அந்தப் பகுதியை புனிதப் பிரதேசமாக அறிவிக்குமாறும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
துணுக்காய் பிரதேசசபையின் 3ஆவது அமர்வு தவிசாளர் கனகரத்தினம் செந்தூரன் தலைமையில் பிரதேசசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, பிரதேசசபை உறுப்பினர் சுயன்சனால் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன்போது. துயிலுமில்ல வளாகம் அமைந்துள்ள காணியில் மக்களின் காணிகளும் உள்ளடங்குகின்றன என்றும், இதுதொடர்பில் 2017ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநரிடம் மாற்றுக் காணிகள் தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் உறுப்பினர் செல்வநாயகம் ரஜீவன் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து கருத்துத் தெரிவித்த தவிசாளர் கனகரத்தினம் செந்தூரன், துயிலுமில்லம் அமைந்துள்ள இடம் புனித பிரதேசமாக மாற்றப்படவேண்டும் என்பதில் பொதுவான உடன்பாடுஉள்ளது. போரிலே இறந்தவர்களை மதிக்கின்ற பண்பாடு எங்களுடையது.
எனவே, உரிய நடைமுறைகளின் ஊடாக துயிலுமில்லக் காணியை புனித பகுதியாக அறிவிக்க நவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து, முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

