ஏராளமான துப்பாக்கிகள், போதைப்பொருள் மற்றும் பணம் அடையாளம் காணப்பட்ட நிலையில் , 21 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கனடாவின் பீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டொரோண்டோ முழுவதும் போதைப்பொருள் கடத்தியதாக நம்பப்படும் ஒரு கும்பல் தொடர்பான ஒரு மாத கால விசாரணைக்குப் பிறகு இந்த குற்றசாட்டை பொலிஸார் சுமத்தியுள்ளனர்.
டிசம்பர் 2024 இல் விசாரணையைத் தொடங்கியதாகவும் இருப்பினும், கடந்த மாதம் வரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அண்மைய சோதனையின் போது, இரண்டு தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகள், அதிக அளவு கோகோயின் மற்றும் வலிநிவாரணிகள் மற்றும் கணிசமான அளவு கனேடிய நாணயத்தை மீட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
விசாரணையின் விளைவாக, 21 வயதான ஈதன் வில்லியம்ஸ்-கோவாலிக் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.