இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா கப்பல் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றது.
இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது எனவும் 147 மீற்றர் நீளமுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 பணியாளர்களுடன் இந்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
நாட்டில் தங்கியிருக்கும் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை நட்பை வலுப்படுத்த இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
எதிர்வரும் 14 ஆம் திகதி இந்த கப்பல் நாட்டை விட்டு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.