கனடாவில் தமிழ் சமூக மையத்தை அமைப்பது குறித்தும் அதில் ஏற்பட்டுள்ள சாவல்கள் குறித்தும் இன்று கனடா வாழ் தமிழ் ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் ஊடகவிலாளர் சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.
கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரும்பணியை முன்னெடுக்க முயற்சித்து வந்த போதிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளினால் இந்த பணியை பூர்த்தி செய்ய முடியாது போயுள்ளதாக குறித்த பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தமிழ் சமூக அமைத்தை அமைப்பதை துரிதப்படுத்தவதற்கான உரிய தருணம் வந்திருப்பதால், கனடா வாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் சமூக மையத்தை அமைக்க கைகோர்க்க வேண்டும் என்பதே இந்த பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த தமிழ் சமூக மையத்தை அமைப்பதற்காக கனடா மத்திய, மாகாண அரசாங்கம் 26.3 மில்லியன் டொலர்களை மானியமாக வழங்கியுள்ளது.
எனினும், 2027ஆம் ஆண்டுக்குள் இந்த மையத்திற்கான முதல் கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் இந்த இலக்கை அடைய முடியாது போனால் அரசாங்கத்தின் மானியத்தை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்று பணிப்பாளர் சபை உறுப்பினரும், ஊடகவியலாளருமான ரமணன் தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ரமணன் தெரிவித்தார்.
தமிழ் சமூக மையத்தின் நிறுவனர் சாந்த பஞ்சலிங்கம், உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கெடுத்தனர்.
4.11 ஏக்கர் நிலப்பரப்பில், 27,000 சதுர அடி நிலப்பரப்பில் சுமார் 55 மில்லியன் டொலர்கள் செலவில் தமிழ் சமூக மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கனடாவில் அமையவுள்ள தமிழ் சமூக மையத்திற்கான திட்டம் குறித்த முழுமையான தகவல்களை இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
https://tamilcentre.ca/