கனடாவின் தண்டர்பேயின் வடக்குப் பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஒரு சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுத சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, வெள்ளிக்கிழமை காலை 8:30 மணியளவில் வடக்கு கம்பர்லேண்ட் வீதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டதாக தண்டர் பே பொலிஸார் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்திய சந்தர்ப்பத்தில் அவர்களுடன் ஒரு மோதல் ஏற்பட்டது என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேக நபருடன் இருந்த மற்றுமொருவர் அந்த இடத்தில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்று அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் வெள்ளிக்கிழமை இரவு காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதிக்கு அதிகளவான பொலிஸார் துப்பாக்கிகளுடன் சென்ற நிலையில் அங்குள்ள கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. அங்கிருந்த மக்கள் அச்சத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் தமக்கு இன்னும் அறிவிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.