14.6 C
Scarborough

“ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை” – ‘கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை!

Must read

‘கண்ணப்பா’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அப்படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ள படம், ‘கண்ணப்பா’. தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு, கண்ணப்பராக நடித்துள்ளார். சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்‌ஷய்குமார் என பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைத் தமிழில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ஜூன் 27-ம் தேதி வெளியிடுகிறது.

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ‘கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் ‘கண்ணப்பா’ திரைப்படம் ஜூன் 27, 2025 அன்று முழு சட்டப்பூர்வ அனுமதியுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தையோ அல்லது அதன் பங்குதாரர்கள் குறித்து அவதூறு பரப்பினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் படம் பொதுமக்களுடன் அதிக அளவில் தொடர்புப்படுத்தும் வகையில் பொறுப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து விமர்சகர்களும் முன்கூட்டியே திட்டமிட்ட உள்நோக்கம் அல்லது பழிவாங்கும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், படத்தைப் பார்த்து, அதன் சாரத்தைப் பாராட்டி, நோக்கத்தைப் புரிந்துகொண்டு, பின்னர் பொறுப்புடன் கருத்து தெரிவிக்குமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (a)-ன் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை புனிதமானது மற்றும் பாதுகாக்கப்பட்டது என்பதை நாங்கள் அங்கீகரிக்கும் அதே வேளையில், ஒரு படைப்பின் மீது வேண்டுமென்றே அழிவுகரமான தாக்குதல், அது உடல் ரீதியாகவோ அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், அது கருத்துரிமை அல்ல. மாறாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு வகையான செயல் என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article