டொரோண்டோ நகரின் 27,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மார்ச் 8 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிர்வாகம் அவர்களை பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தலாம் என குறிப்பிடப்படுகின்றது.
ஒன்றாரியோ தொழில் அமைச்சிற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டினால் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட உள்ளது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கோரப்பட்டுள்ளது.
எனினும், இந்த கோரிக்கைகளுக்கு நிர்வாகத் தரப்பிலிருந்து இதுவரையில் சாதக பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 8ம் திகதி பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.