இந்தியாவின் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை தாமதமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் நிலவி வருகின்றது.
இந்நிலையில் வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும் பனிமூட்டம் காட்சி தெளிவின்மையை உருவாக்குவதாக
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

