அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரையில் 43 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 15 குழந்தைகள் உள்ளதாகவும், மேலும் 27 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 850 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும், ஏனைய நிவாரண சேவைகளுக்கும் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதேநேரம் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 850 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
நிவாரணக் குழுக்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பெருமளவிலான குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் அங்கு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலரும் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.