டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிநவ் தேஷ்வால் பிரஞ்சலி, பிரசாந்த் துமால் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
இந்த ஜோடி 16-6 என்ற கணக்கில் சீன தைபேவின் யா-ஜு காவோ மிங்-ஜுய் ஜோடியை வீழ்த்தி முதலிடம் பெற்றது. 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்தியாவின் குஷாக்ரா சிங் ரஜாவத் 224.3 புள்ளிகளை பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

