15.4 C
Scarborough

டிரம்ப் பதவியேற்பையொட்டி பலத்த பாதுகாப்பு

Must read

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நாளை(20) பதவியேற்க உள்ளார். இதற்காகப் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட டிரம்ப் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனுக்கு நேற்று (18) சென்றடைந்தார். பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்க தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வொஷிங்டனின் புறநகரில் வேர்ஜினியாவின் ஸ்டெர்லிங்கில் உள்ள டிரம்ப்பின் தேசிய கோல்ப் கிளப்பில் இரவு விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. இதில் புதிய ஜனாதிபதியாகும் டிரம்பும், துணை ஜனாதிபதியாகும் ஜே.டி.வான்சும் பங்கேற்று தங்களின் அமைச்சரவை சகாக்களை வரவேற்று விருந்தளிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து,இன்று(19) இராணுவ வீரர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஆர்லிங்க்டன் தேசிய கல்லறைக்கு டிரம்ப் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர், பதவியேற்கும் விழாவான நாளை அவர் வெள்ளை மாளிகைக்கு செல்லும் முன்பாக பாரம்பரிய வழக்கப்படி செயின்ட் ஜோன்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்கிறார். அதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகைக்கு வரும் டிரம்புக்கு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் தேநீர் விருந்து அளித்து வரவேற்பார்கள்.

பின்னர் ஜனாதிபதி பைடன் புதிய ஜனாதிபதி டிரம்ப்பை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு முறைப்படி 47வது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றுக் கொள்வார். சம்பிரதாயப்படி, தனது முதல் அறிவிப்பு குறித்த ஆவணத்தில் டிரம்ப் கையெழுத்திட்டு ஜனாதிபதி பணியைத் தொடங்குவார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article