15.4 C
Scarborough

டிக்டொக் பதிவால் 15 வயது மகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் தந்தை

Must read

பாக்கிஸ்தானில் டிக்டொக்கில் பதிவிட்ட விடயத்திற்காக தனது 15 வயது மகளை தந்தையொருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாக்கிஸ்தானின் தென்மேற்குநகரமான குவெட்டாவில் வீதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவிலிருந்து தனது குடும்பத்தினரை பாக்கிஸ்தானிற்கு மீள அழைத்துவந்த ஒருவரே இந்த கொலையை செய்துள்ளார்.

முதலில் தனது மகளை இனந்தெரியாதவர்களே சுட்டுக்கொன்றனர் என தெரிவித்த அன்வர் உல் ஹக் பின்னர் தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

15 வயது யுவதி ஆடை அணிந்த விதம் அவரது வாழ்க்கை முறை குறித்து குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டு வந்தமை விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த யுவதியின் கையடக்கதொலைபேசி எங்களிடம் உள்ளது அது முடக்கப்பட்டுள்ளது,இது ஆணவ கொலையா என விசாரணை செய்கின்றோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் அமெரிக்க பிரஜாவுரிமை உடையவர், என தெரிவித்துள்ள பொலிஸார் தனது மகள் அமெரிக்காவில் வசிக்கும் போது சமூக ஊடகமான டிக்டொக்கில் ஆட்சேபணைக்குரிய விடயங்களை பதிவிட்டார் என அவர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

241 மில்லியன் சனத்தொகையை கொண்ட பாக்கிஸ்தானில் 54 மில்லியன் மக்கள் டிக்டொக்கினை பயன்படுத்துகின்ற நிலையில் பாக்கிஸ்தான் அரசாங்கம் பல தடவைகள் டிக்டொக்கிற்கு தடை விதித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article