14.6 C
Scarborough

ஜப்பானில் ட்விட்டர் கொலையாளிக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!

Must read

ஜப்பான் 2017 ஆம் ஆண்டில் ஒன்பது பேரைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது, 2022 க்குப் பிறகு அந்த நாடு மரண தண்டனையை அமுல்படுத்தியதில் இதுவே முதல் முறை.

தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சரகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

2017-ல் நடந்த இந்த கொடூர சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம், 2020-ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்வார்.

இறந்தவர்களில் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவர். பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பின்னரே அவர் அவர்களைக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது.

2017ல் பொலிஸார் ஷிரைஷியின் வீட்டை சோதனை செய்தபோது, குளிர்சாதன பெட்டிகளில் ஒன்பது உடல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்ததையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

ஜப்பானில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article