விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஜன.9-ம் தேதி வெளியாக இருந்தது. தணிக்கை சான்றிதழ் காரணமாக வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இப்படத்தின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், என்னால் எல்லாவற்றையும் பகிர முடியவில்லை. கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘ஜனநாயகன்’ தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதைக்குழு ஆய்வு செய்து, டிச. 22 அன்று சில மாற்றங்களைப் பரிந்துரைத்தது. ‘யுஏ 16 பிளஸ்’ சான்றிதழ் வழங்கப்படும் என மெயில் மூலம் தெரிவித்தனர்.

