கதையின் நாயகனாக நடித்து மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரா தயாரிக்கும் படம், ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். நாயகியாக நீமா ரே நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் வெளியான ‘பிங்காரா’ என்ற படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். மேலும் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர் என பலர் நடித்துள்ளனர்.
ஏ.எம் அசார் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வலைதளங்களை மையமாக வைத்து சைக்கோ த்ரில்லர் ஜானரில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்குத் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.