8.7 C
Scarborough

செவ்வாயன்று புதிய அமைச்சரவையை அறிவிப்பார் கார்னி!

Must read

பிரதமர் மார்க் கார்னி செவ்வாயன்று Rideau Hall இல் தனது புதிய அமைச்சரவையை அறிவிக்கவுள்ளார். மூன்றில் ஒரு பகுதியினர் புதியவர்களை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளது.

புதிய அரசாங்கத்தில் கார்னி மாற்றத்தை காட்டுவதற்கு முயற்சி செய்தாலும் அவர் முன்னைய பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றிய பலரால் சூழப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி, கனடாவின் முன்னாள் பிரதமர் ட்ரூடோவின் அரசாங்கம் மீது கொண்டுள்ள எதிர்ப்பு உணர்வினால் கனடா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வரிவிதிப்பு போன்றவற்றை கவனத்திற் கொண்டு சிலரை புதிய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

ஆயினும் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளாங்க் மற்றும் வெளியுறவு அமைச்சர்  மெலனி ஜோலி ஆகிய இருவரும் முன்னாள் பிரதமரின் அமைச்சரவையில் அமெரிக்க நிர்வாகத்தின் வர்த்தக செயலாளர் மற்றும் வெளியுறவு செயலாளர் போன்றோருடன் முக்கிய தொடர்புகளுடன் உறவுகளை வளர்த்தவர்கள். மேலும் அவர்களின் கோப்புகளைப் பற்றிய ஆழமான அறிவையும் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

பிரதமர் கார்னிக்கு சவாலான விடயம் என்னவென்றால் அமைச்சரவையை மாற்றும் போதும் குறைக்க நினைக்கும் போதும் அவரை சுற்றியுள்ள லிபரல்களை எவ்வாறு சமாளிப்பது என்பதுதான். எனினும் ஒரு அரசாங்கத்தின் நான்காவது பதவிக் காலத்தில் இந்த அளவு புதிய திறமையாளர்கள் வருவது அரிது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கார்னி தனது அமைச்சரவையிலும் பாலின சமத்துவத்திற்கு உறுதியளித்துள்ளார். இவருடைய முதல் அமைச்சரவை, ட்ரூடோவின் கடைசி அமைச்சரவையை விட சிறியதாக இருந்தது. எனினும் இதில் பெண்கள், பாலின சமத்துவம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் அல்லது தொழிலாளர் அமைச்சர் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

குறைந்த சம்பளம், சிறிய அலுவலக வரவுசெலவு, குறைவான ஊழியர்கள் மற்றும் குறைந்த அதிகாரம் கொண்ட junior cabinet அமைச்சர்களை கார்னி மீண்டும் கொண்டு வரலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தபோதும் நாடாளுமன்றம் மே 26 அன்று மீண்டும் கூடும் என்றும், அடுத்த நாள் மன்னர் சார்ள்ஸ் அக்கிராசனத்தில் அமர்ந்து உரை நிகழ்த்துவார் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article