யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைக்குழியை நாளைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி பகுதியிலுள்ள இந்து மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக வெட்டப்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த விடயம் குறித்து யாழ்ப்பாண காவல்துறையினரால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நாளை பிற்பகல் 3 மணிக்குக் குறித்த இடத்தை நீதவான் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.