15.3 C
Scarborough

செப்பு இறக்குமதிக்கு August 01 முதல்50 சதவீத வரி விதிக்கின்றது அமெரிக்கா!

Must read

தேசிய பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற பின்னர் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய August 01 முதல் அமெரிக்கா செப்பிற்கு 50 சதவீத வரி விதிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி Donald Trump புதன்கிழமை சமூக வலைத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

பாதுகாப்புத் தரப்பினரால் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது பொருளான செப்பு குறைக்கடத்திகள், விமானங்கள், கப்பல்கள், வெடிமருந்துகள், தரவு மையங்கள், Lithium-ion Batteries, Radar Systems, ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் Hypersonic ஆயுதங்கள் போன்றவற்றிற்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. செப்பினை தற்போது அதிகளவு தாம் உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்கா கூறுகின்றது.

செம்பு இறக்குமதிக்கு 50 சதவீத வரி விதிப்பதாக Trump கூறிய ஒரு நாளுக்குப் பின்னரே இந்தச் செய்தி வந்துள்ளது. எனினும் அந்தச் செய்தியில் வரி எப்போது அமுலுக்கு வரும் என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை.

கடந்த February அமெரிக்க வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் பிரிவு 232 இன் கீழ் செம்பு இறக்குமதிகள் குறித்து விசாரணை நடத்த Trump உத்தரவிட்டார், இது உலோக இறக்குமதிகளுக்கு வரி விதிக்க அவருக்கு அதிகாரத்தை வழங்கியது.

கனடாவின் இயற்கை வளங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் அமெரிக்கா மிகப்பெரிய செம்பு இறக்குமதியாளராக இருந்தது, மொத்த ஏற்றுமதி மதிப்பில் 52 சதவீதத்தையும், அதைத் தொடர்ந்து Chaina மற்றும் Japan ஆகியவையும் உள்ளன. அதே ஆண்டில், கனடாவின் செம்பு மற்றும் செம்பு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி $9.3 பில்லியன் மதிப்புடையது.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, கடந்த ஆண்டு அமெரிக்காவின் சுத்திகரிக்கப்பட்ட செம்பு இறக்குமதியில் Chile, Canada மற்றும் Peru ஆகியவை 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தன. இந்நிலையில், உலகளாவிய செம்பு இருப்புக்களில் கனடா ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அத்துடன் இது உலகின் 2023 செம்பு உற்பத்தியில் 12வது இடத்தையும் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article