சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாகச் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று அதிகாலை பூமிக்குத் திரும்பினர்.
இலங்கை நேரப்படி அதிகாலை 03.27 மணியளவில் புளோரிடா கடலில் அவர்கள் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கடலில் அவர்களின் விண்கலம் தரையிறங்கிய போது ‘ட்ராகன்’ விண்கல கேப்சூலைச் சுற்றி டொல்பின்கள் வட்டமடித்தன.
பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸிற்கு டொல்பின்கள் வரவேற்பளித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.