டொரோண்டோவில் அவசர சிகிச்சை வழங்கப்படும் நோயாளர்களை காக்க பயன்படும் இரண்டு ஒரேஞ்சு உலங்கு வானூர்திகள், சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த வானூர்திகளை பராமரிக்க தேவையான உதிரி பாகங்களை பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் இதற்கு காரணம் என ஒரேஞ்சு வானூர்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வரிகள் மற்றும் உக்ரேன் போர் காரணமாக மூலப்பொருட்களை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உலங்கு வானூர்திகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் வரையில் தரை வழி போக்குவரத்து பயன்படுத்தப்படும் என ஒரேன்ஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த வான் வழி எம்புலன்ஸ்களில் ஒன்று 48 மணி நேரம் பயன்படுத்த முடியாததாகவும், நகரத்திற்கு சேவை செய்யும் இரண்டாவது சேவை ஜூலை 18 வரை செயல்படாமல் இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.