4 C
Scarborough

சீரியல் நடிகை தற்கொலை முயற்சி!

Must read

தமிழில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கௌரி’ சீரியலில் நடித்து பிரபலமான நடிகை நந்தினி, நேற்று பெங்களூருவில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், கன்னட சீரியல்களிலும் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனிடையே, தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்திருந்த கடிதம் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்தில், பெற்றோர் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகவும், தான் திருமணத்திற்கு மன ரீதியாகவோ உடல் ரீதியாகவோ தயாராக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கடந்த சில மாதங்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொலிஸார் அந்தக் கடிதத்தைக் கைப்பற்றி, சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நந்தினி இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல், தனது நடிப்பு வாழ்க்கையில் முழுக்கவனம் செலுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துயர சம்பவம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள், சீரியல் யூனிட் உறுப்பினர்கள் மற்றும் தொழில் துறையினரிடையே ஆழமான வேதனையை ஏற்படுத்தியுள்ளது. திறமைசாலி இளம் நடிகை ஒருவரை சின்னத்திரை இழந்திருப்பது பலரையும் மனமுடைய வைத்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article