இலங்கைக்கான சீனத் தூதுவருடனான சந்திப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
”விஜேராமவில் உள்ள அரச இல்லத்திலிருந்து நான் புறப்படுவதற்கு முன்பு, இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிடமிருந்து மரியாதை நிமித்தமான சந்திப்பை நடத்தியதில் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது வருகையை நான் பாராட்டுகிறேன்.மேலும் நமது நாடுகளுக்கு இடையேயான நீடித்த நட்பை, இராஜதந்திர மற்றும் தனிப்பட்ட முறையில், அன்புடன் நினைவு கூர்கின்றேன்.” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.