சிரிய பாதுகாப்பு அமைச்சின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவின் கிழக்கு நகரங்களான தெயிர் எல்-ஸோர் மற்றும் மயாதீன் இடையிலான நெடுஞ்சாலையில், பாதுகாப்பு அமைச்சின் பேருந்தின் மீது இன்று (16) வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரையில், இந்தச் சம்பவத்துக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

