நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடிப்பில் உருவாகும் ‘45 தி மூவி’படத்தில் இடம்பெற்ற ‘ஆஃப்ரோ தபாங்’ பாடல் வைரலாகி வருகிறது.
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஏற்கெனவே இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், க்ளிம்ப்ஸ்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆஃப்ரோ தபாங்’ என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தமிழில் கானா காதர் எழுதி பாடியுள்ளார். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.
ஜானி நடனம் அமைக்க, ஆப்பிரிக்க நடனக் கலைஞர்கள் இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இப்பாடல் தமிழில் ஒரே நாளில் 7 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. கன்னடத்தில் இப்பாடல் 40 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்று வைரலாகி வருகிறது. இப்பாடல் இடம்பெற்ற ‘45 தி மூவி’ திரைப்படம் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
Hindu Tamil

