சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதால், இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.
நேற்று (25) பொலன்னறுவை பகுதியில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
தீவின் பல பகுதிகளில் இருந்து பல்வேறு காரணங்களால் காட்டு யானைகள் இறக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
‘பாட்டியா’ யானையின் மரணத்தை தொடர்ந்து, சமீபத்தில் முழு நாட்டின் கவனமும் காட்டு யானை இறப்புகளில் கவனம் செலுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.