இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட பாடகி தீ, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் படைப்பாற்றல் மிக்க கலைச் சூழலுக்கு சென்ற அவரது பயணம், மரபும் உலகளாவிய தாக்கமும் இணைந்த ஒரு வலிமையான இசைஅடையாளத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், சுயாதீன பாடலான ‘வரி வரி’ இசை ஆல்ப வீடியோவை கொழும்பில் பாடகி தீ வெளியிட்டுள்ளார். இப்பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் வரிகளில் பாடகி தீ பாடியுள்ளார்.

