இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட்டில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது வாசிம் அக்ரம் கிளென் மெக்ராத், அக்தர், போன்ற மகத்தான பவுலர்களை எதிர்கொண்டார். அந்த வகையில் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டார்.
குறிப்பாக சச்சின் அடித்தால்தான் இந்தியா வெற்றி பெறும் என்ற சூழ்நிலை இருந்ததை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்தளவுக்கு எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர் 30000-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து 100 சதங்கள் விளாசி இந்தியாவின் பல மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
மறுபுறம் 2008-ல் அறிமுகமான விராட் கோலியும் கிட்டத்தட்ட சச்சின் போலவே நவீன கிரிக்கெட்டில் உலகின் டாப் பவுலர்களுக்கு சவாலை கொடுத்து இதுவரை 27000+ ரன்கள் 80+ சதங்கள் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் சில சமயங்களில் சச்சினை விட விராட் கோலிதான் சிறந்தவர் என்று ரசிகர்கள் கூறுவது வழக்கமாகும்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயிலிடம் சச்சின் – விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.