கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 230,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (27) அக்குரெஸ்ஸவில் உள்ள கோடபிட்டிய தேசிய பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்த பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், “மேற்கு மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம், 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளார்கள்.
தெற்கு மாகாணம் இன்னும் பெரிய நிலைக்குத் தள்ளப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தெற்கு பகுதி பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. இலங்கையில் சிறையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அவர், “நாங்கள் ஏற்கனவே சிவில் உடையில் ஏராளமான அதிகாரிகளை நியமித்துள்ளோம். நீங்கள் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும், நீங்கள் எப்படிச் செல்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள், எங்கு சுற்றித் திரிகிறீர்கள் என்பதைப் பாருங்கள்.

