இந்தோனேசியாவில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மீதான விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கை கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் இந்த சந்தேக நபர் தொடர்புடையவரா என்பதைத் தீர்மானிக்க மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த சந்தேகநபர் மீது மேலும் விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு மேலதிக நீதவான் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.