காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்று (30) நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காரைநகர் பகுதியில் கரையோர பகுதிகளுக்கே அதிகளவான நீர் தேவை உள்ளது. ஆனால் அங்கே பிரதான குழாய்கள் பொருத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

