கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தில் கடந்த பெப்ரவரி தொடக்கத்திலிருந்து தற்போது வரை, குளிர்கால விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த குறைந்தது மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து மொண்ட்ரியல் சிறுவர் மருத்துவமனையின் (Montreal Children’s Hospital) அதிர்ச்சிப் பிரிவு இயக்குநர் விடுத்துள்ள எச்சரிக்கையில், பனிச்சறுக்கு (Sledding) போன்ற விளையாட்டுகளின் போது போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பனி விளையாட்டுகளில் பிள்ளைகள் ஈடுபடும்போது, பெற்றோரின் நேரடி கண்காணிப்பு மற்றும் தகுந்த பாதுகாப்பு கவசங்கள் இன்றி விளையாடுவது ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குளிர்கால பொழுதுபோக்குகள் மகிழ்ச்சியானதாக இருந்தாலும், சிறுவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

