காஸாவில் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ அதிராகத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனத்தின் காஸா நகருக்குள் தரை வழியாக ஊடுருவி முன்னேறி வருகிறது.
இதையடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதால் பலஸ்தீனர்கள் காஸா நகரை விட்டு கால்நடையாகவும், வாகனங்கள் மூலமாகவும் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில் 14 நாடுகளால் இந்தத் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.