ஸ்பெயினில் இடம்பெற்ற கார் விபத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் டியோகோ ஜோட்டா உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
28 வயதான அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டதாகவும், தனது சகோதரருடன் காரில் பயணித்த போது இந்த விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த விபத்தில் டியோகோவின் சகோதரரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தி கார் தீப்பற்றி எரிந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஸ்பானிஷ் ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, ஜோட்டா தனது சகோதரர் ஆண்ட்ரேவுடன் ஒரு காரில் பயணித்ததாகவும், அவரும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து ஜமோராவின் A-52 மாகாணத்தில் நடந்தது.
காஸ்டில்லாவில் உள்ள அவசர சேவைகள் விபத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
விபத்து குறித்து காஸ்டில்லா ஒய் லியோன் செயல்பாட்டு அறைக்கு பல அழைப்புகள் வந்தன. ஒரு கார் விபத்தில் சிக்கியதாகவும், கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இந்த விபத்து குறித்து ஜமோரா போக்குவரத்து காவல்துறை, ஜமோரா மாகாண சபை தீயணைப்பு படை மற்றும் சசில் அவசர ஒருங்கிணைப்பு மையம் (CCU) ஆகியவற்றிற்கு தகவல் அளித்தது.
இதனையடுத்து சுகாதார மையத்திலிருந்து மருத்துவ அவசர பிரிவு (UME) மற்றும் முதன்மை பராமரிப்பு மருத்துவ ஊழியர்கள் (MAP) அனுப்பப்பட்டனர், அவர்கள் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறந்ததை உறுதிப்படுத்தினர்,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.