கனடாவின் டொரண்டோவில் வீதியோர துப்பாக்கிசூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டொன் வெலிக் பார்ப் பிரதேசத்தில் யோர்க் வீல் வடக்கு வௌியேறும் வாயில் பகுதியில் இந்த துப்பாக்கிசூட்டு சண்டை நடந்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதன்போது கருப்பி நிற காரில் வந்தவர்கள் மற்றுமொரு காரில் பயணித்தவர்களை நோக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதனால் காருக்கு சேதம் ஏற்பட்டிருந்தாலும் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மே (06) அதிகாலை வேளையில் இடம்பெற்றிருந்தாக பொலிஸார் கூறுகின்றனர். இது தொடர்பிலான தகவல்களை அறிந்திருக்கும் பட்சத்தில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.