சித்தார்த், ராஷி கன்னா ஜோடியாக நடித்துள்ள காமெடி படத்துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். வம்சி வில்லனாக நடித்துள்ளார்.
இதை ‘டக்கர்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேவா இசை அமைத்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் டைட்டில் குறித்து கார்த்திக் ஜி கிரிஷ் கூறும்போது, “ரவுடிகளின் கார்ப் பரேட் சாம் ராஜ்யம் பற்றிய கதை என்பதால் இந்த தலைப்பை வைத்துள்ளோம். முழுவதும் நகைச்சுவை நிறைந்த என்டர்டெயினராக இப்படம் இருக்கும். படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இன்னும் 15- 20 நாட்களில் போஸ்ட் புரொடக் ஷன் பணிகளும் நிறைவடைந்துவிடும்” என்றார்.
HinduTamil

