இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகத் தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானதேரருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு ,கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அவருக்கு 1,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி கிருலப்பனை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானதேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.