கனடாவின் ஈஸ்ட் வென்கூவர் பகுதியில் கர்பிணி பெண்னொருவர் செலுத்திச் சென்ற டெஸ்லா வகை கார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் குறித்த பெண் பயணித்த கார் கண்ணாடி உடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வன்கூவர் பொலிஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. தாக்குதல் இன்னும் ஓரிரு அடிகள் விலகியிருந்தால் அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் தெய்வாதீனமாக உயிர்த்தப்பிய கர்பிணிப் பெண் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.
அமெரிக்க வெறுப்பு காரணமாக டெஸ்லா வகை கார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.