6.3 C
Scarborough

கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

Must read

பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தப் பாரிய தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் Kemi Badenoch அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவைப் பின்பற்றி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதிக்கவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் திரை நேரம் மொழி வளர்ச்சியைப் பாதிப்பதாகக் கல்விச் செயலாளர் Bridget Phillipson கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாகப் பெற்றோர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ள நிலையில், சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article