Newfoundland மற்றும் Labrador ஆகிய இடங்களில் இனங்காணப்பட்ட இரண்டு முக்கிய திட்டங்களான கடல் எண்ணெய் வயல் மற்றும் Quebec உடனான நீர்மின்சார ஒப்பந்தம் ஆகியவை கனடாவின் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை அதிகரிக்கக்கூடும் என்று பிரதமர் Mark Carney திங்களன்று கூறினார்.
மத்திய அரசாங்கத்திடமிருந்து விரைவான ஒப்புதல்களைப் பெறும் தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் என்று Carney அழைக்கும் பட்டியலில் தங்கள் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் திட்டங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று மாகாணங்கள் ஆர்வமாக உள்ளன இக்கொள்கைக்கு Newfoundland மற்றும் Labrador விதிவிலக்கானவை இல்லை.
Newfoundland, Labrador மற்றும் Quebec இடையே ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறிய பிரதமர், அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு பதிலளிக்கும் விதமாக, பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு வழியாக நாடு முழுவதும் முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
செயற்கைக்கோள் கண்டறிதலிலும் நாங்கள் பெரும் முதலீடுகளைச் செய்கிறோம், இது விரைவாக நகரவும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும் இந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் விரைவாக நகரும் திறனையும் வழங்குகிறது என்று Carney கூறினார். இது கனடாவின் பொருளாதாரத்திற்கு மற்றொரு பக்கபலமான சக்தியாக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.