பாலியல் சீண்டல்களின் அதிகரிப்பு காரணமாக கனடாவில் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக கல்ப் நகரில் பெண்களுக்காக இலவச சுய பாதுகாப்பு பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இதில் பெண்களின் சுய பாதுகாப்புக்கு அவசியமான தற்பாதுகாப்பு கலைகள் கற்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி 1 மணி முதல் 2.30 மணி வரையில் கல்ப் நகரிலுள்ள டெல்டா மரியோட் மாநாட்டு மண்டபத்தில் இந்த பயிற்சி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமையில் நடக்கும் போதான மன உறுதி, தன்னம்பிக்கை, தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ளல், இந்த பயிற்சி முற்றிலும் இலவசமானது என்பதுடன் கல்ப் நகரிற்கு வௌியில் இருப்பவர்கள் கூட இதில் கலந்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.