கனடாவின் முன்னாள் துணை பிரதமர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், பிரபலமான ரோட் டிரஸ்ட் Rhodes Trust அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொறுப்பு ஜூலை 1, 2026 முதல் அமுலுக்கு வரும் என்று அந்த கல்வி அறக்கட்டளை நிறுவனம் உறுதிப்படுத்தியது.
ஃப்ரீலாண்ட் இந்த பொறுப்பை ஏற்க ஆக்ஸ்ஃபோர்டுக்கு குடிபெயர உள்ளார் என ரோட்ஸ் டிரஸ்ட் பேச்சாளர் பபெட் லிட்டில்மோர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஃப்ரீலாண்ட் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் திட்டத்தை அறிவிக்கவில்லை. அவரது அலுவலகத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அவரது உள்ளூர் லிபரல் தொகுதி அமைப்பு, அவர் எப்போது விலகுவார் அல்லது இடைத்தேர்தல் வேட்பாளர் யார் எனும் விவரங்களைப் பற்றி எந்த தகவலும் இல்லையென தெரிவித்துள்ளது.
ஃப்ரீலாண்ட் ரோட்ஸ் உதவித்தொகை பெற்றவர் என்பது குறிப்பிட்டுள்ளார்.
ரோட்ஸ் புலமைப் பிரிசில் எனது வாழ்க்கையையும் தொழிலையும் மாற்றியது எனவும், இந்தப் பொறுப்பை ஏற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது பெருமை ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.
1990களின் தொடக்கத்தில் அவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

