“இன்று இரவு, கனடியர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் ஒன்று கூடி, புத்தாண்டின் தொடக்கத்தை கொண்டாடுவார்கள். நாடு முழுவதும் உள்ள குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றாகச் சேர்ந்து, வரவிருக்கும் ஆண்டை வரவேற்கும் நேரமிது.
புத்தாண்டு முன்னிரவில், கடந்த ஆண்டில் நமக்கு மகிழ்ச்சியளித்த தருணங்களையும், அவற்றை சிறப்பாக்கிய நமது வாழ்வில் உள்ள மனிதர்களையும் நாம் நினைவுகூருகிறோம்.
இந்த ஆண்டு எமது நாட்டிற்கு பல சவால்களை கொண்டு வந்திருந்தாலும், நாம் ஒரு விசேடமான, தாராள மனம் கொண்ட, அக்கறையுள்ள தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு அதிஷ்டம் என்பதையும் அது நினைவூட்டியுள்ளது.
நாம் ஒன்றுபட்டிருக்கும்போது, ஒருவருக்கொருவர் கவனம் செலுத்தும்போது, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ளும்போது தான் நாம் மிக வலிமையானவர்களாக இருக்கிறோம்.
அதுவே கனடாவை வலிமையான நாடாக உருவாக்குகிறது. இந்த ஆண்டு முடிவடையும் தருணத்தில், அதே ஊக்கத்தையும் அதே பெறுமதிகளையும்2026 ஆம் ஆண்டிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் உறுதி செய்கிறோம்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள், கனடா.” என மார்க் கார்னி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
canadamirror

